February 7, 2010
எப்பொழுதோ எடுத்து மாட்டிய (புகைப்படம்)!
- Posted in தமிழ் by vidhyasagar
- No Comments »
நிகழ்வுகளை
நினைவுகளாய் பதிந்துக்கொண்ட படம்!
அழுத
உணர்வுகளின் நகலாய்
உயிர்பெற்றுள்ள -
‘என்றோ’ வான அந்த நாள்!
கடந்த காலத்தை -
காலப் பெட்டகம் தனக்குள்
குறித்துக் கொள்ளும் வித்தை!
மிடுக்காகவும் -
துடிப்பாகவும் காட்டும்
போலி பிரதிபிம்பம்!
காந்தியையும்
நம் வீடுகளுக்கு கொண்டுவந்த
விஞ்ஞான ஜாலம்!
ஒரு வீட்டை; ஊரை
சின்ன காகிதத்தில் -
அடக்கிக்கொண்ட ஆச்சர்யம்!
நான் என்றோ ஓடியாடிய தருணத்தை
என் அக்காவும் நானும் -
கைகோர்த்து நடந்த நடையை கூட
நான்கு சட்டத்திற்குள் அடக்கி
என் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும்
உன்னத கண்டுபிடிப்பு புகைப்படம்!
————————————————————————
வித்யாசாகர்
- Posted in தமிழ் by thamilrasigan
- No Comments »